தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, கூடுதல் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்
கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் கொடூரமாக பரவிவருகிறது. இந்தத் தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை அனுப்பி வைக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா 2 வது அலை, தமிழகம் முழுவதும் ஏராளமானோரைப் பாதித்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு 32 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன், கூடுதல் ரெம்டெசிவர் மருந்து, கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.







