செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் மரம் புனரமைப்பு பணிகளுக்காக வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது.108 திவ்ய தேசங்களில் 63வது தேசமாக விளங்கக்கூடிய இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.தற்போது இக்கோயிலில் நிர்வாகத்தின் சார்பாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதற்காக கோயில் வளாகத்தில் இருந்த 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரமொன்றை இரவோடு இரவாக வெட்டியுள்ளனர்.இதனால் இன்று காலையில் வந்தப்பார்த்தப்போது மரத்தின் அடிவேரோடு வெட்டப்பட்டிருந்தது.
இந்த மரம்தான் பல ஆட்டோ ஓட்டுநர்களின் புகழிடமாகவும்,பக்தர்கள் இளைப்பாறவும் இடமாகவும் விளங்கி வந்தது.இதனால் மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் அமைப்பினர்,பாமகவினர் இணைந்து அமைப்பின் மாநில துணைச்செயலாளர் ஐ.நா.கண்ணன் தலைமையில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மெழுகுவர்த்தி ஏந்தியும்,பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
வேந்தன்







