நீலகிரி மாவட்டம் குன்னூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிரபல தனியார் ஹோட்டல்களில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சிகள் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக விளக்கமளிக்க அந்த உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சிக்கன் ஸவர்மா சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பிரபல சுற்றுலா தலமான குன்னூரில் உள்ள பிரபல தனியார் உணவகங்களில் டாக்டர் சுரேஷ் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் சோதனையின்போது 7பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கெட்டுப் போன இறைச்சி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கடைகளுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.அதிகாரிகளின் இந்த தீடீர் ஆய்வு நீலகிரியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வேந்தன்







