சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்தியில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதனால் இன்று (ஜூலை : 18) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்
சென்னையை பொறுத்தவரை இன்று (18-07-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




