ஒரு நாள் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு…? – ஊகங்களுக்கு பிசிசிஐ மறுப்பு…!

ரோகித் ஷர்மாவின் ஓய்வு குறித்தான ஊகங்களுக்கு பிசிசி செயலாளர் தேவாஜித் சாய்கியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க பேட்ஸ்மேனுமான ரோகித் ஷர்மா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அந்த தகவல்களின் படி, 2027 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியை பிசிசிஐ சீரமைக்க திட்ட மிட்டுள்ளதாகவும், பயிற்சியாளர் காம்பிர் உள்ளோட்டோர் இளம் வீரர்களை கொண்ட அணியை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்சமயம் பார்ம் இன்றி தவிக்கும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஒரு நாள் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிசிசிஐயின் இந்த முடிவால் இங்கிலாந்து – இந்தியா இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜூலை 19) நடைபெற உள்ள மூன்றவது ஒரு நாள் போட்டியுடன் ரோகித் தனது ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோகித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க உள்ளார் என்கிற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலககோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தயாராகி வந்த நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ரோகித் ஷர்மாவின் ஓய்வு குறித்தான ஊகங்களுக்கு பிசிசி செயலாளர் தேவாஜித் சாய்கியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது : ரோகித் ஷர்மாவின் ஓய்வு குறித்து ஊடகங்களில் பல யூகங்கள் பரவி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸில் ரோகித் தனது கடைசிப் போட்டியில் விளையாடுவார் என்றெல்லாம் எந்த பேச்சும் நடைபெறவில்லை என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

ரோஹித் இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர உறுப்பினர். அவர் அணியில் இருக்கும் வரை தொடர்ந்து நாட்டிற்காக விளையாடுவார். வேறுவிதமாகக் கூறினால், லார்ட்ஸ் ஒருநாள் போட்டி அவருடைய கடைசிப் போட்டியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளின் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ள ரோகித் ஷர்மா
இந்தியாவுக்காக 287 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 33 சதங்கள் உட்பட 11,757 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 48.58.

நாளை லார்ட்ஸ் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றால், கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த ஏழாவது வீரராக தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.