முத்தரப்பு ஒருநாள் போட்டி : பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!

ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லாகூரில் இன்று நடைபெற்ற 5-வது லீக் போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. அதிகமாக பாபர் அசாம் 27 ரன் எடுத்தார். இலங்கை அணி சார்பில் தில்ஷன் மதுஷனகா 5 விக்கெட்டும், சஹன் ஆராச்சிகே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். இறுதியில், இலங்கை அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. தொடர்ந்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள 6வது லீக் தொடரில் இலங்கை அணி, இங்கிலாந்துடன் மோதுகிறது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.