“இந்தியாவில் மாணவர்களுக்கு ஐந்தில், நான்கு பாதைகள் மூடப்பட்டுள்ளன!” – ராகுல்காந்தி

வினாத்தாள் கசிவு மான்வர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இழைக்கப்படும் அவமானம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், ரேஸ் கோர்ஸில் உள்ள பன்னு பள்ளி மைதானத்தில் நடைபெறும் ‘சத்ரோன் கி கூஞ்ச்’ நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு மாணவர்களுடன் நேரடியாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் உள்ள ஒரு மையப் பிரச்னை குறித்த நான் உங்களிடம் விவாதிக்க விரும்புகிறேன். அது நமது நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பற்றியது. அது நமது கல்வி முறை மற்றும் தேர்வு முறை பற்றியது. இது ஒரு அரசியல் கூட்டம் அல்ல. இது மாணவர்களின் எதிர்காலம், போராட்டம் மற்றும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தது.

இந்தியாவில், ஐந்து கதவுகளில் நான்கு கதவுகள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அவை ஏன் மூடப்பட்டுள்ளன? ஏனென்றால், இந்தியாவின் உற்பத்தித் துறை முடங்கியுள்ளது, அதே நேரத்தில் சீனப் பொருட்கள் நாடு முழுவதும் விற்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள வங்கி நிதிகள் வெறும் 4-5 வணிக நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுள்ளதால் இரண்டாவது கதவான தொழில்முனைவும் மூடப்பட்டுள்ளது, உங்களில் எவரேனும் தொழில்முனைவோர் ஆக விரும்பினாலோ அல்லது வங்கிக் கடன் கோரினாலோ, அது கிடைக்காது. மூன்றாவது கதவான பெருநிறுவன வேலைகள், தகவல் தொழில்நுட்பத் துறையில், செயற்கை நுண்ணறிவால் பெரும் அடியை சந்தித்துள்ளது. அதேபோல நான்காவது கதவான பொதுத்துறை நிறேஉவனக்கள் தனியார்மயமாக்கல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே பாதை அரசு வேலைதான். 6 கோடி மக்கள் இந்தக் குறிப்பிட்ட கதவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். 6 கோடி மக்கள் தேர்வை எழுதுகின்றனர், ஆனாலும் அவர்கள் நிதிச்செலவு போன்ற தடைகளை எதிர்கொள்கின்றனர். 9 கோடி தேர்வர்களில், 6 லட்சம் பேர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். இது ஒரு பெரிய எண்ணிக்கை. அவர்களில் நீங்கள் முதலிடம் பிடித்திருந்தால் மட்டுமே இந்தப் பாதையைத் தொடர முடியும். இரண்டாம், மூன்றாம் அல்லது நான்காம் இடம் பிடித்தவர்கள் அதனை தொடர முடியவில்லை.

இந்த நிலையில் உங்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னாள், இரண்டு கதவுகள் உள்ளன. ஒன்று நேர்மையான பாதை அதில் நீங்கள் நிதி இழப்பு மற்றும் குடுந்ப அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மற்றொரு பாதை ‘வினாத்தாள் கசிவு’ பாதை. இதில் உங்களிடம் பணம் இருந்தால் பொதுமானது. நீங்கள் நேர்மையற்றவராக இருக்க விரும்பினால், இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். ​​நமது மாணவர்களில் 99.9% பேர் நேர்மையானவர்கள்; அவர்கள் இந்தப் பாதையைப் பின்பற்றுவதில்லை. இருப்பினும், 1% பேர் இந்த வழியைப் பயன்படுத்துகிறார்கள், அதன் விளைவாக மற்ற எல்லா இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

வினாத்தாள் கசிவுகள் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் சுமார் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒருவருக்கு கூட தண்டனை வழங்கப்படவில்லை. இது இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான ஒரு முக்கியப் பிரச்சினை. இது உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் இழைக்கப்படும் அவமானம். இது உங்கள் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இழைக்கப்படும் அவமானம்” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.