தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  டிச.15 தமிழ்நாட்டில் ஒருசில…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  டிச.15 தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: தங்கம் விலை தொடர் உயர்வு…இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் காலை முதல் மேகமூட்டமாக காணப்படுகிறது.  இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தஞ்சாவூர், விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.