தங்கம் விலை தொடர் உயர்வு…இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்துள்ளது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்துள்ளது.

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அதன்படி, சென்னையில் கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை வியாழக்கிழமை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.960 உயர்ந்து பவுன் ரூ.46,560-க்கு விற்பனையானது.  இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து 2-ஆவது நாளாக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்: விக்னேஷ் சிவனுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்… படத்தின் தலைப்பு இதுவா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 5,830-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640-க்கும் விற்பனையாகிறது.  இதேபோன்று வெள்ளி விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.2.50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.79.50-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.80.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி (கட்டி வெள்ளி) ரூ.1000 உயர்ந்து ரூ.80,500-க்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.