முக்கியச் செய்திகள் தமிழகம்

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைப் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சட்டமாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மதுரையில் அவரது திருவுருவ சிலைக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து அம்பேத்கர் சிலை முன்பு விழுப்புரத்தைச் சேர்ந்த ஜோடிக்கு திருமாவளவன் திருமணம் செய்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, அரக்கோணம் இரட்டைப் படுகொலையில் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறினார். மேலும் காவல்துறையினர் அறிக்கையில் முக்கிய தகவல்கள் வெளியாகவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், அவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Jeba

இந்த எண்ணை அழைத்தால் காய்கறி, மளிகை உங்கள் பகுதிக்கு வரும்!

கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி!

Ezhilarasan