கன்னியாகுமரியில் கொரோனா பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடியில் சோதனையை கடுமையாக்க வேண்டும் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக- கேரள எல்லை பகுதிகளில் உள்ள களியாக்கவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் குறைவான அளவிலேயே சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் உள்ளனர். இதனால் கேரளாவில் இருந்து வருகின்றவர்களை முழுமையாக பரிசோதனை செய்ய முடியாத நிலை உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், அதிக சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் காவலர்களை நியமித்து பரிசோதனை மற்றும் சோதனையை கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.







