டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அம்பேத்கர், என புகழாரம் சூட்டினார். மேலும் வருடைய வழியில் நின்று தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம் தன்னுடைய கடமையை நிறைவேற்றும் எனவும் கூறினார்.







