திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!

திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் தேங்காய்…

திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பைச்
சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில்
தேங்காய் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருச்செந்தூர் -திருநெல்வேலி சாலையில்
டாஸ்மார்க் அருகே சாலையோரத்தில் அவரது காரை நிறுத்திவிட்டு ஹோட்டலில் சென்று
உணவு வாங்க சென்றுள்ளார்.

அப்போது திடீரென காரின் முன்பகுதியிலிருந்து புகை கிளம்பியுள்ளது. இதனையடுத்து கார் மளமளவென தீ பிடிக்க தொடங்கியது. இதுகுறித்து தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பினர் விரைந்து தீயை அணைத்தனர். கார் தீப்பிடித்தது கூட தெரியாமல் கார் உரிமையாளர் உணவு வாங்கிக் கொண்டிருந்தார்.

தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலும் அணைத்தவுடன் காரை எடுக்க வந்த கார் உரிமையாளர் கார் தீ பற்றி எரிந்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் பேட்டரியில் இருந்து புகை கிளம்பி தீ பிடித்ததாக தெரியவந்தது.

மேலும் காரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. மேலும் பிரதான சாலையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிக்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தால் திருச்செந்தூர் திருநெல்வேலி சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.