திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உலகெங்கும் சிவாலயங்களில் பிரசித்தி பெற்றதும்,பஞ்சபூத தலங்களில்…

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

உலகெங்கும் சிவாலயங்களில் பிரசித்தி பெற்றதும்,பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம்.ஒவ்வொரு தமிழ் மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷத்தன்று இங்குள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஆவணி மாத பிரதோஷமான நேற்று ஆலயத்தின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு அரிசிமாவு,பஞ்சாமிர்தம், இளநீர்,பால்,தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாதரனையும் நடைபெற்றது.இதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.