முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திருப்பதியில் கஞ்சா கடத்தல்; ஆளும்கட்சிக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒப்பந்த ஊழியர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடக்காத சம்பவங்கள் அரங்கேறுவதாக தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கஞ்சா பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, பயிரிடுதல், கடத்தல், உட்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி ஊழியர் ஒருவரிடம் நேற்று கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் அனைவரையும் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருப்பதியில் உள்ள அலிபிரி சப்தகிரியில் சந்தேகப்படும் வகையில் நபர் ஒருவர் கையில் பையுடன் சுற்றி வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஒப்பந்த ஊழியர் என்பது தெரியவந்தது. அவரது கால்களில் பிளாஸ்டிக் பைகளை சுற்றி கட்டி வைத்துள்ளார். அதை அவிழ்த்து சோதனையிட்ட போது 15 பாக்கெட்களில் 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

இதையும் படிக்கவும் : கார்த்தியை மனதில் வைக்காமல் ரொமான்ஸ் சீன்ஸ் வராது- ஏ.ஆர்.முருகதாஸ்

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஏழுமலையான் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் Ganja in Tirumala என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திருமலைக்கு கஞ்சா கடத்தி சென்ற விஷயம் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிரது. இதனால் பக்தர்கள் மிகவும் கலக்கமும், கோபமும் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் தேவஸ்தானம் விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்றில் இதுவரை திருப்பதியில் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை என்று  ஆளும்கட்சியினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் : அமைச்சர் சேகர் பாபு!

Jeba Arul Robinson

உழைக்கும் கைகளே… உருவாக்கும் கைகளே: தொழிலாளர் தின வரலாறு

EZHILARASAN D

வாத்தி கம்மிங்; அடுத்தடுத்து வரும் தனுஷ் படங்கள்

EZHILARASAN D