நடிகர் கார்த்தியை மனதில் வைக்காமல் ரொமான்ஸ் சீன்ஸ் வைக்க முடியாது என்று ஆகஸ்ட் 16, 1947 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.
இயக்குனர் முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகியாக ரேவதி நடித்துள்ளார். பல சின்னத்திரை பிரபலங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் : பத்துதல படத்திற்கு யுஏ சான்றிதழ்!
ஆகஸ்ட் 16, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கௌதம் கார்த்தி, புகழ், தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ், ஆகஸ்ட் 16, 1947 படத்தின் கதையை சொன்னவுடன் படத்தை செய்ய ஒப்புக்கொண்டேன். 3 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக படக்குழுவினர் அதிக உழைப்பை கொடுத்துள்ளனர்.
நடிகர் கார்த்தியை மனதில் வைக்காமல் எந்த ஒரு ரொமான்ஸ் சீன்ஸ் வைக்க முடியாது. துப்பாக்கி இரண்டாம் பாதியில் ஒரு சீன் வரும். அந்த காட்சி கார்த்தியை மனதில் வைத்து தான் பண்ணேன். இது என்னை அறியாமல் வந்தது.
இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது பொன்குமார் கதை தான் எல்லாம். நல்லவனுக்கு சாப்பாடு போடலாம். வல்லவனுக்கு வாய்ப்பு தான் கொடுக்க முடியும். கதை சிறப்பாக இருந்தால் அவரை வாழ்த்துங்கள். சரியாக இல்லை என்றால் என்னை திட்டுங்கள். அதற்கு வாய்ப்பு இருக்காது என்று தான் நினைக்கிறேன். அவர் என்னை பார்த்து தான் கற்றுக்கொண்டார் என்று கூறினார்.