திருப்பத்தூர் அருகே விவசாய கிணற்றில் விழுந்த 2 கரடிகளையும் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கல்துருகம் அருகே வனப்பகுதியை
ஒட்டி விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த விவசாய நிலம் சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமானது. இங்கு உள்ள உள்ள விவசாயக் கிணற்றில் இரண்டு கரடி விழுந்திருப்பதாக அவ்வழியாகச் சென்ற ஒருவர் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கரடியை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் இரவு முழுவதும் மீட்பு பணி நடந்தது. 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு
கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை வனத்துறை மற்றும் தியனைப்பு துறையினர் உயிருடன்மீட்டனர். பின்னர் இரண்டு கரடிகளும் காட்டுப்பகுதிக்குள் சென்றது.