“தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்

தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டாலே 3வது அலையை தடுத்துவிட முடியும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 100…

தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டாலே 3வது அலையை தடுத்துவிட முடியும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 100 மையங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தடுப்பூசி திருவிழாவை மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி குறித்து தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வந்துள்ளதாகவும், புதுச்சேரியில் ஒரு நாள் கூட தடுப்பூசி இல்லை என்ற நிலை வரவில்லை என தெரிவித்த அவர் நோயற்ற மாநிலமாக புதுச்சேரி மாறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர். மக்கள் முற்றிலுமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முழு அக்கறையோடு அரசு செயல்பட்டு வருவதாகவும் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் அளவிற்கு அரசு தயராக உள்ளது என்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே 3 வது அலையை தடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.