GOLD RATE: தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன…?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி நேற்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று காலையில் உயர்ந்த தங்கம் விலை, மாலையிலும் 2-வது முறையாக அதிகரித்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் 1,06,400க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் தங்கத்தின் விலை மொத்தமாக சவரனுக்கு ரூ.1,280ம், கிராமுக்கு ரூ.160ம் அதிகரித்தது. அதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்தது. அதன்படி வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கும், சவரனக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,690-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.