தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே, இன்று தங்கம் விலை அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், காலையில் உயர்ந்த தங்கம் விலை, மாலையிலும் 2-வது முறையாக அதிகரித்தது. அதன்படி, மாலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் 1,06,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280ம், கிராமுக்கு 160ம் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.235-க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




