முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

வெளியூர் செல்பவர்களுக்காக பேருந்துகள் இன்றும் நாளையும் இயங்கும்!

ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு 24 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இருந்தும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால், மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தளர்வுகளற்ற ஊரடங்கை முன்னிட்டு, பொதுமக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணி வரையிலும், நாளை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

’கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சராகப் பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

Halley karthi

போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!

Halley karthi

தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை

Halley karthi