தூத்துக்குடியில் காவேரி மருத்துவமனை சார்பாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தியாவில் நான்கில் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது. அதிக அளவு இறப்பும் மார்பக புற்றுநோயால் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம், 1ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ”பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
இதை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று காவேரி மருத்துவமனை மற்றும் ஏபிசி
மகளிர் கல்லூரி சார்பில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வுபேரணியில் ஏராளமான கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். பேரணியை ஏபிசிவி மகாலட்சுமி கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் பாலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மருத்துவர்கள் இந்துஜா மற்றும் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு மார்பக
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினர்.







