ஆந்திராவில் நள்ளிரவு நடந்த தடியடி திருவிழா: 60 பேர் படுகாயம், ஒருவர் உயிரிழப்பு!

ஆந்திராவில் பல்லாயிரக்கணக்கானோர் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொண்ட திருவிழாவில் 60 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு மலைப்பகுதியில் மல்லேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. …

ஆந்திராவில் பல்லாயிரக்கணக்கானோர் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொண்ட திருவிழாவில் 60 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு மலைப்பகுதியில்
மல்லேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது.  அந்த மலைப் பகுதியில் வசிக்கும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாள் அன்று இரவு மல்லேஸ்வர சாமி கோயில் முன்கூடி, கோயிலில் உள்ள சிலையை தங்கள் ஊருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இதற்காக பெரும் போட்டி நடைபெறும்.

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்குள் பிரிந்து ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொள்வது வழக்கம்.  மிக நீண்ட கால வரலாறு உடைய இந்த திருவிழா வழக்கம் போல் நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் தேவரகட்ட மலையில் நடைபெற்றது.

திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்
கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சாமி சிலையை கைப்பற்றுவதற்காக கைகளில் தடிகளை ஏந்தி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

இதையும் படியுங்கள்:சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்தது திமுக – அண்ணாமலை விமர்சனம்

இந்த தடியடி நிகழ்ச்சியில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதே நேரத்தில் திருவிழாவை வேடிக்கை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் அங்குள்ள வேப்பமரம் ஒன்றின் மீது ஏறி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.  வேப்பமரம் ஒடிந்து விழுந்து கணேஷ் என்பவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் திருவிழாவில் நடைபெற்ற தடியடியில் படுகாயம் அடைந்தவர்களை மீட்ட
போலீசார் அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.