ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட்…

கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்திருக்கிறது.  இந்த மையத்தில் நேற்று (ஏப்ரல் – 6) ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நிரப்பியுள்ளார்கள். இந்நிலையில்,  அன்று இரவு இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் ரூ.10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : நள்ளிரவில் சாலையில் ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிடும் நயன்தாரா | வீடியோ வைரல்!

ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை அங்கு வந்த பொதுமக்கள் பார்த்துவிட்டு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,  விசாரணை மேற்கொண்டனர்.  ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து வங்கி அலுவலர்களுக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகை அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.