கல்லூரி மாணவியை கொலை செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூரன் கைது!

கல்லூரி மாணவியை கழுத்தை நெறித்து கொலை செய்து வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை தனியார் விடுதியில் நேற்று காலை 10 மணிக்கு கேரளாவை சேர்ந்த ஆஷிக்…

கல்லூரி மாணவியை கழுத்தை நெறித்து கொலை செய்து வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை குரோம்பேட்டை தனியார் விடுதியில் நேற்று காலை 10 மணிக்கு கேரளாவை
சேர்ந்த ஆஷிக் (20) என்ற நபரும்,  அருகில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படிக்கும் கல்லூரி மாணவி பவுசியா (20) ஆகிய இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.  இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.  அறையில் இருந்த போது காதலனான ஆஷிக் செல்போனை காதலி பவுசியா எடுத்து பார்த்துள்ளார்.

அதில் காதலன் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை பார்த்துள்ளார்.  இது குறித்து பவுசியா,  ஆஷிக்கிடம் கேட்டுள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் ஆத்திரமடைந்த காதலன் ஆஷிக் காதலியான பவுசியாவை தனது டி சர்ட்டால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

பின்னர் வாட்ஸ் ஆப்பில் இருவரின் போட்டோவை ஸ்டேட்டஸாக வைத்து,  கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.  ஆஷிக்கின் ஸ்டேட்டஸை பார்த்த பவுசியாவின் தோழிகள் நேரில் சென்று பார்த்த போது பவுசியா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.  பின்னர் அவர்கள் காவல்  நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சென்ற குரோம்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  பின்னர் செல்போன் சிக்னலை வைத்து காதலன் ஆஷிக்கை பல்லாவரத்தில் வைத்து குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.  ஆஷிக்கிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.