புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 47,000 -யைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சனிக்கிழமை சென்னையில் ஒரு சவரன்…

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 47,000 -யைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
சனிக்கிழமை சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 520 உயர்ந்து ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதன் மூலமாக தங்கத்தின் விலை ரூ. 47,000-யைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச் சலுகை இல்லை – இந்தியா அறிவிப்பு!

ஒரு கிராம் தங்கம் ரூ. 65 உயர்ந்து ரூ.5,915-க்கும் விற்பனையாகி வருகிறது.  இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதேபோல், வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.83.50-க்கும் ஒரு கிலோ ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.