சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(20) உணவு டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். ஐவரும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா (20) என்ற பெண்ணும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததால் ஜாதியை காரணம் காட்டி ராம்யாவை விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ரம்யா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனையறிந்த லோகேஷ் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அறையில் இருந்து வெகுநேரமாக லோகேஷ் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பீர்கன்கரனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







