ஆட்சியர் அலுவலகத்திற்கு தொலைபேசியின் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமி என்ற நபர் ஒருவர் மது போதையில் உள்ள போது கண்டோன்மென்ட் காவல் நிலைய கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய நபர் இன்னும் சற்று நேரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெடிக்கப் போகிறது என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் அந்த என்னை ட்ராக் செய்தனர். அதில் அந்த நபர் தான் மது போதையில் பேசியதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை அடுத்து எடமலைப்பட்டி புதூர் அருகே பஞ்சப்பூரில் அவரை ட்ராக் செய்து சென்ற அதே பகுதியை சேர்ந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் பஞ்சப்பூரை சேர்ந்த பழனிசாமி என்பதும் தொடர்ந்து மதுபோதையில் இது போன்று பேசி வருவதும் தெரிய வந்துள்ளது. இதனால் அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








