முக்கியச் செய்திகள் தமிழகம்

நீலகிரியில் தொடரும் கனமழை; 5வது நாளாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாயாற்றில் ஐந்தாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உதகையில் இருந்து மசினகுடி வழியாக கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருகிறது. எட்டாவது நாளாக இடைவிடாமல் இன்றும் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஐந்தாவது நாளாக மாயார் ஆற்றில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் தெப்பக்காடு தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் உதகையிலிருந்து மசினகுடி வழியாக கூடலூர் மற்றும் மைசூர்செல்லும் சாலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் மசினகுடி, மாயார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக கூடலூர் மற்றும் மைசூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மாயார் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் காரணமாக, தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்படும் யானைகளை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழங்குடிகள் மக்கள் சுற்றுலா பயணிகள் மாயாறு ஆற்றின் அருகே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”நாங்கள் வீரர்கள்; எல்லையில் நின்று மக்களை காப்போம்” – எம்.பி திருச்சி சிவா

EZHILARASAN D

இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் வேண்டுமா?

வங்கிகள் உயர்த்தும் வட்டி சதவிகிதம் எவ்வளவு தெரியுமா?

Arivazhagan Chinnasamy