திருச்சி மாநகராட்சியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

நாகை, திருவாரூர் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார். நாகை தஞ்சாவூர்…

நாகை, திருவாரூர் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் பல்வேறு
வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

நாகை தஞ்சாவூர் திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும்
பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிடுவதற்காக தனி விமானம் மூலம் தமிழக
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
பின்னர் திமுக பேச்சாளரும் மூத்த நிர்வாகியுமான செல்வேந்திரன் இல்லத்திற்கு
நேரடியாக சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களோடு அமர்ந்திருந்த பொது மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றார்.  தமிழக முதல்வரை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திரண்டிருந்தனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் ஓட்டுனராக பணியாற்றி நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ள
உறையூரைச் சேர்ந்த கார்த்திகேயன் முதல்வரிடம் மனுவை அளித்தது தனது வாழ்நாளில்
மிகப்பெரிய நெகிழ்ச்சியான சம்பவம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.