அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய மகான் அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. அவர் அருளிய அருள்மொழிகளைப் பார்ப்போம்… எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!! —…

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய மகான் அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. அவர் அருளிய அருள்மொழிகளைப் பார்ப்போம்…

எளியாரைக் கண்டு

இரங்கியிரு என் மகனே!

வலியாரைக் கண்டு

மகிழாதே என் மகனே!!

எளியோரைக் கண்டால்

ஈந்து இரங்கிடு நீ!
வரம்பு தப்பாதே

வழி தவறி நில்லாதே!!

சத்துருவோடும்

சாந்தமாய் இரு!
புத்தியில்லாரோடும்

பேசியிரு என் மகனே!!

தாழக் கிடப்பாரைத்

தற்காப்பதே தர்மம் !!


அடக்கம் பெரிது

அறிவுள்ள என் மகனே!
கடக்கக் கருதாதே!

கற்றோரைக் கைவிடாதே!

 

ஆசை வையாதுங்கோ

அவகடம் செய்யாதுங்கோ

ஞாயமுறை தப்பி

நன்றி மறவாதுங்கோ!

இரப்போருக்கு எப்படி மனமிரங்கி ஈவது என்பது பற்றியும் தனது அருளுரையில் கூறியுள்ளார்.

இரப்போர் முகம் பார்த்து

ஈவதுவே நன்றாகும்!

பரப்போரைக் கைகோர்த்து

பரிவதுமே நன்றாகும்!


உள்ளவனுக்கு ஒன்று

இல்லாதவனுக்கு ஒன்று
என்று ஓரங்கள் சொல்லாதே!

இன்றுமுதல் எல்லோரும்

ஒன்றுபோல் புத்தியா இருங்கோ!
அவனவன் தேடுமுதல்

அவனவன் வைத்து ஆண்டிடுங்கோ!


காணிக்கை வேண்டாதுங்கோ,

கைக்கூலி கேளாதுங்கோ!

அன்பு குடி கொண்ட

அதிக மக்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ

பூலோகம் ஆள வைப்பேன்!


சத்தியம் தான் மறந்து

மத்திபத்தைச் செய்யாதே
மத்திபத்தைச் செய்தாயானால்

மனநாகம் தீண்டிவிடும்!

 


பொல்லாதாரோடு

பொறுமை உரை மகனே!
கோபத்தைக் காட்டாதே

கோளோடு இணங்காதே!!

மோதிப் பேசாதுங்கோ,

மோகம் பாராட்டாதுங்கோ!

 

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் பிறந்த நாள் அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் அய்யா வைகுண்டரின் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

-வெற்றிநிலா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.