தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை அந்நிலங்களை சேதப்படுத்தி வரும் வீடீயோ சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தென்காசி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த மாவட்டமாகும். இங்குள்ள குற்றாலம்,பழைய குற்றாலம் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களாகும். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இக்காடுகளில் புலி,சிங்கம்,யானை,கரடி,குரங்கு உள்ளிட்ட ஏராளமான் வன விலங்குகள் உள்ளன .இவ்விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவது, விவசாய நிலங்களை சேதபடுத்துவது போன்றவை வாடிக்கையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கடையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த கரடி 3 நபர்களை கடுமையா தாக்கியது. மேலும் இந்தாண்டு இரண்டு பருவ மழைகளும் பொய்த்து போனதன் காரணமாக கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழைய குற்றாலம் பகுதியில் ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள தென்னை,வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது.ஒத்த கொம்பு யானை என பெயரிடப்பட்டுள்ள இந்த யானை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏற்கனவே வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இந்த காட்டு யானையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வனத்துறையினர் எவ்வளோ முயன்றும் யானையை காட்டுக்குள் விரட்ட முடியவில்லை. இந்நிலையில் யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வீடீயோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
–வேந்தன்







