முக்கியச் செய்திகள் தமிழகம்

கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை தொற்று குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன், புதுச்சேரியில் இதுவரை 20 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் குறிப்பிடத்தக்க தொற்று நோயாக கருப்பு பூஞ்சை தொற்று அறிவிக்கபட உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

நாளை வானில் தோன்றும் ‘ரத்த நிலவு’

நடிகை யாமி கவுதம் திடீர் திருமணம்: இயக்குநரை மணந்தார்!

Karthick

பல முனை போட்டி அதிமுகவுக்கு சாதகம்தான் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan