முக்கியச் செய்திகள் இந்தியா

வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை மருந்து தயாரிப்பு!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தை தயாரிக்க கூடுதலாக ஐந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் திடீரென கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருகிறது. இந்த நோய் தொற்று காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆம்போடெரிசின்-பி (Amphotericin-B) என்ற மருந்தை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த மருந்துக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆம்போடெரிசின்-பி மருந்தை தயாரிக்க கூடுதலாக 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி எம்கியூர் பார்மாசூட்டிக்கல்ஸ், குஃபிக் பயோசயின்ஸ்,அலிம்பிக் பார்மாசூட்டிக்கல்ஸ், லைக்கா பார்மாசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 6 நிறுவனங்கள் ஆம்போடெரிசின்-பி மருந்தை தயாரித்து வருகின்றன. இதையடுத்து இந்தியாவில் மொத்தம் 11 நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரிக்கவுள்ளன. மேலும் ஆம்போடெரிசின்-பி மருந்து அனைத்து மாநிலங்களிலும் தேவையான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Advertisement:
SHARE

Related posts

C-17 குளோப்மாஸ்டர் – ராணுவத்தின் ராஜாளி பறவை

Halley karthi

தொழிலாளியின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்

ஹைதி நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு

Gayathri Venkatesan