கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு: அரசுக்கு ஆலோசனை வழங்க குழு!

கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 400-க்கும் மேற்பட்டவர்கள், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக,…

கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 400-க்கும் மேற்பட்டவர்கள், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கு வதற்காக, மருத்துவக் கல்வி இயக்குநர் தலைமையில், 13 மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்க, முடிவு செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.