முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் இதுவரை 400 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் 400 பேர் பாதிப்பு. தொற்று தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க கமிட்டி உருவாக்கம்

நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலோடு தற்போது கருப்பு பூஞ்சை தொற்றும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பூஞ்சை மட்டுமல்லாது, வெள்ளை பூஞ்சை தொற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது வரை 400 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பெரிய மருத்துவமனைகளில் 30 படுக்கைகள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தொற்றுக்கு எதிரான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது என்றும், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கே இத்தொற்று பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என்றும் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33,361 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

”நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்”- மருத்துவமனை அறிக்கை!

Jayapriya

டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கி 7.8 லட்சம் கொள்ளை!

Saravana

7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

Jeba Arul Robinson