கோவைக்கு, மாநில அரசு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கி வருவதாக, பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை காந்திபுரம் பாஜக மாவட்ட அலுவலகத்தில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதை சுட்டிக்காட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை மாவட்டத்தில் தினசரி 30 ஆயிரம் தடுப்பூசிகளை போடும் அளவிற்கு, மாநில அரசு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மாநில அரசுக்கு மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளை அளிப்பதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளதற்கு பதிலளித்து பேசிய வானதி சீனிவாசன், மாநில அரசு கையிருப்பில் வைத்திருக்கும் தடுப்பூசியை, மக்களுக்கு கொண்டு செல்லாமல் தொடர்ந்து தடுப்பூசிகளை கேட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், இந்தியாவிலேயே தடுப்பூசிகள் வீணாவதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும், வானதி சீனிவாசன் தெரிவித்தார்.