பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் பிப். 29-ல் வெளியீடு?

வரும் பிப். 29-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள பாஜக மையக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில்…

வரும் பிப். 29-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள பாஜக மையக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவிவருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் மையக்குழுக் கூட்டம் வரும் பிப். 29-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த பட்டியலில் 100 முதல் 120 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற உள்ளதாகவும் தமிழ்நாட்டில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயரும் அன்று வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.