முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி

பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்,  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள்  கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் V.செந்தில் பாலாஜி அறிவிப்பு

அப்போது பேசிய வைகோ, திராவிட இயக்கத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என தெரிவித்தார். ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், இதற்காக ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.

 

பொதுக்கூட்டத்தில் பேசிய எம்பி கனிமொழி, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பாஜக குழப்பங்களை ஏற்படுத்துவதாக விமர்சித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கும் எதிர்க்கட்சிகளின் அணி, மக்களவைத் தேர்தலில் ஆட்சியை மாற்றிக் காட்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சியை பாஜகவால் கலைக்க முடியாது என்று சூளுரைத்த எம்பி கனிமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக பேசிய திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றி ஆளுநர் செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram