“மக்களவை தேர்தலுக்கு பாஜக கூட்டணி தயாராகிவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி!

பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும்…

பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குறித்த முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ளார். ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

https://twitter.com/narendramodi/status/1768955234808701347

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விட்டோம். நல்லாட்சி மற்றும் துறைகள் முழுவதும் சேவை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் செல்கிறோம்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.