ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை – மக்களவைத் தேர்தல் அறிவிப்பு முழு விவரம் இதோ!

7  கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய…

7  கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குறித்த முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ளார். ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்: 

ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் வருமாறு:

  1.  அருணாச்சலப் பிரதேசம்
  2.  அந்தமான் & நிகோபார் தீவுகள்
  3.  ஆந்திரா
  4.  சண்டிகர்
  5. தத்ரா மற்றும் நகர் ஹவேலி
  6.  டெல்லி
  7.  கோவா
  8.  குஜராத்
  9.  இமாச்சலப் பிரதேசம்
  10.  ஹரியானா
  11.  கேரளா
  12. லட்சத்தீவுகள்
  13. லடாக்
  14.  மிசோரம்
  15.  மேகாலயா
  16. நாகாலாந்து
  17. புதுச்சேரி
  18. சிக்கிம்
  19. தமிழ்நாடு
  20. பஞ்சாப்
  21. தெலங்கானா
  22. உத்தரகாண்ட்

2 நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்

  1. கர்நாடகா
  2. ராஜஸ்தான்
  3. திரிபுரா
  4. மணிப்பூர்

3 நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்: 

  1. சத்தீஸ்கர்
  2. அசாம்

4 நாட்களாக வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்:

  1.  ஒடிசா
  2.  மத்தியப் பிரதேசம்
  3. ஜார்க்கண்ட்

5 நாட்களாக வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்: 

  1. மகாராஷ்டிரா
  2. ஜம்மு & காஷ்மீர்

7 நாட்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்: 

  1. உத்தரப் பிரதேசம்
  2. பீகார்
  3. மேற்கு வங்கம்

ஏழு கட்டமாக நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் முதல் கட்டத்தில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்,

அதேபோல இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் ஏப்ரல் 26-ம் தேதியும்,

மூன்றாம் கட்டமாக 12 மாநிலங்களில் மே 7-ம் தேதியும்,

நான்காம் கட்டமாக 10 மாநிலங்களில் மே 13-ம் தேதியும்,

ஐந்தாம் கட்டமாக ஆறு மாநிலங்களில் 20-ம் தேதியும்,

ஆறாம் கட்டமாக 7 மாநிலங்களில் மே 25-ம் தேதியும்,

ஏழாம் கட்டமாக ஆறு மாநிலங்களில் ஜூன் 1-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.