பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த உத்தரவிட்டது யார்..? – மக்களவையில் பிரியங்கா காந்தி கேள்வி…!

டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த உத்தரவிட்டது யார்..? என்று மக்களவையில் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியதாவது :

பிரதமர் நரேந்திர மோடி ‘கேமரா கோணத்தை அல்ல, இதயத்தின் கோணத்தை’ மாற்ற வேண்டும். நாட்டின் இளைஞர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளையும் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளையும் ஏவிவிட வேண்டிய அவசியம் என்ன..? அவர்கள் பயங்கரவாதிகளா..?

பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த உத்தரவிட்டது யார்? அது பிரதமரா? அல்லது உள்துறை அமைச்சரா? அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

தேர்வு முறையே தோல்வியடைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. கோடிக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை.

முன்னாள் கல்வி அமைச்சர் (தர்மந்திர பிரதான்) கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் உள்ள ஒரு குடும்பம் தங்கள் மகளின் மரணத்திற்காக துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.