விரைவில் கெட்டுப்போகும் சப்போட்டா பழங்களை, பிஸ்கட்களாக தயாரித்து புதிய முயற்சி மேற்கொண்டிருக்கிறது நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்… எதற்காக இந்த முயற்சி, இதில் விவசாயிகளுக்கு என லாபம் என்பதை தற்போது காணலாம்
வைரம், ஜவுளிகளுக்கு பெயர் போன இடம் சூரத், இந்நகரத்திற்கு இரயில்கள், பேருந்துகளில் மூலம், நவ்சாரி மாவட்டத்திலுள்ள கிராமத்து பெண்கள் குழுவாக சப்போட்டா கூடைகளை விற்றுவருகின்றனர். நவ்சாரி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 8,000 ஹெக்டேரில் சுமார் 75,700 மெட்ரிக் டன் சப்போட்டா உற்பத்தி செய்யப்படுகிறது. சப்போட்டா பழங்கள் அதிகபட்சமாக ஐந்து நாட்கள் வரை மட்டுமே கெட்டுப்போகாமல் இருப்பதால், அறுவடை செய்த அன்றே சந்தைக்கு கொண்டு செல்லும் நெருக்கடியில் விவசாயிகள் உள்ளனர். இதனை மனதில் வைத்து சப்போட்டாவை பிஸ்கட்டாக தயாரிக்க நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகத்தின் (NAU) Department of Post-Harvest Technology, அதாவது அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத் துறையானது, கோதுமை மாவுடன் சப்போட்டா பவுடரை கலந்து பிஸ்கட் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே சப்போட்டா பவுடர் உற்பத்தியில் உள்ள நிலையில், அதை கோதுமை மாவுடன் கலந்து பிஸ்கட் தயாரிப்பதற்கான முறையை தாங்கள் உருவாக்கியதாகவும், விவசாயிகள் பழப்பயிரிலிருந்து சிறந்த வருமானம் பெற இது உதவும் என்றும் NAU, உதவி பேராசிரியர் ஜிலன் மயானி தெரிவித்துள்ளார்.
சப்போட்டா தூள் தயாரிக்க NAU ஆராய்ச்சியாளர்கள் முதலில் சப்போட்டாவினை கூழாக மாற்றிக் கொள்கிறார்கள். பின்னர் அதனை உலர்த்துகின்றனர். சப்போட்டாவில் உள்ள சர்க்கரையின் காரணமாக, அதனை உலர்த்துவதற்கு நேரம் எடுக்கிறது. பிறகு, காய்ந்த சப்போட்டா கூழை நன்கு தூளாக தயாரித்த பிறகு, கோதுமை மாவை கலந்து பிஸ்கட் செய்கிறார்கள். இவ்வாறு சப்போட்டா பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது..
குளிர்காலத்தில், 20 கிலோ பழத்திற்கு, 350 ரூபாய்க்கு மேல் கிடைக்கும் என்றும், கோடைக்காலத்தில் பழத்தின் விலையானது 150 ரூபாய்க்கும் கீழே குறைவதாகவும் தெரிவித்த கல்லூரி பேராசிரியர்கள், இந்த பதப்படுத்தும் முறை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக மட்டுமில்லாமல் தங்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து நவ்சாரியில் உள்ள கர்சாத் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரசூல் படேல் கூறுகையில், இந்த மதிப்பு கூட்டும் தொழில்நுட்பத்தினால், சப்போட்டா விவசாயத்தில் தங்களின் வருவாய் அதிகரித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான விவசாய பதிவுகளை நியூஸ்7 தமிழ் அக்ரி யூடியூப் சேனலில் காணலாம்….
Link : https://www.youtube.com/news7tamilagri