பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து; 6 பேர் பலி!!

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள், இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்…

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள், இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்,மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலை கடும்பாடி – மணமை இடைப்பட்ட பகுதியில், ஆட்டோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மகாபலிபுரம் நோக்கி சென்றுள்ளனர். அதே நேரம் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சுமார் 30 பேர் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தும் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக மகாபலிபுரம் மனமை என்ற பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஆட்டோவில் பயணித்த 2 குழந்தைகள், 3 பெண்கள் ஆட்டோ ஓட்டுநர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். சம்பவம் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்துத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்டோ நிலை தடுமாறி வலது பக்கவாட்டில் திடீரென திரும்பியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துளளது . ஆட்டோவில் பயணித்த 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.