கர்நாடக மாநிலம் பந்திபூர் வனப் பகுதியில் இரண்டு ஆண் யானைகள் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் உள்ள படையப்பா, சக்கை கொம்பன், மங்கா கொம்பன், கபாலி போன்ற யானைகளால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில், இன்று கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப் பகுதியில் ஆண் யானைகள் மோதி கொண்ட காட்சிகள் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் சிலர் இந்த காட்சியை பார்த்து வீடியோ பதிவு செய்த நிலையில் யானைகள் பின்நோக்கி வருவதை பார்த்து வாகனத்தை எடுத்து கொண்டு அவசரமாக திரும்பியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.







