முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சிட்னியில் கத்திக்குத்து நடத்திய தமிழரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீசார்

ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தமிழ்நாட்டை சார்ந்தவரை அந்நாட்டு போலீசார் சுட்டுக்கொன்றனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அந்த நபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். ரெயில் நலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.போலீசாரின் விசாரணையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது. தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உபா சட்டம் என்றால் என்ன? சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Jayakarthi

அமெரிக்க ராணுவம் பதிலடி: காபூல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பலி

Gayathri Venkatesan

கம்யூனிஸ்ட் கட்சிகளை மிகுந்த பகுத்தறிவு கொண்ட கட்சியாக மதிக்கிறேன்: ஜெயக்குமார்

Niruban Chakkaaravarthi