தமிழகம் செய்திகள் வாகனம்

நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் – மத்திய இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்

நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் ஆய்வு மேற்கொண்டார். கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறை, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை போன்றவற்றை பார்வையிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், இந்தியா முழுவதும் 12 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், விரைவில் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். கொரோனா காலத்துக்குப் பின்னர் ரயில் பயணிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறிய அவர், மும்பை ஐஐடி மாணவர்கள் இதற்கான செயலி ஒன்றை வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : 2 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாதா? – சிக்கன், மட்டன் கிரேவி ஏற்றுமதியில் அசத்தும் சிவகங்கை பெண்!

மேலும், ரயில்வே துறையில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டண சலுகை குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 75 ரயில் நிலையங்கள், நகர்ப்புற ரயில் நிலையங்களாக மாற்றப்படும் என்றும் கூறினார்.

– கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பு ஆலோசனை: முதல்வர் தலைமையில் குழு அமைப்பு!

Halley Karthik

ஊழலற்ற ஆட்சி அமைய சரியான தலைமை வேண்டும்: கமல்ஹாசன்

எல்.ரேணுகாதேவி

சசிகலா உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

Jayapriya