வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி

எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிகையில், கோவையில் எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க…

எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிகையில், கோவையில் எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சிக்கின்றனர். கலவரத்தை ஏற்படுத்த முயற்சி த்தால், பொறுமையாக இருக்க தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும்.

எதிர்கட்சி நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கை மைய்யதிற்கு ஆயிரக்கணக்கான நபர்களை கொண்டு வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றனர்.தற்போது, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு உள்ளது. எனவே கூடுதல் போலிஸ் பாதுகாப்பு தேவையில்லை.தேர்தலில் முகவரி மாற்றங்கள் இருந்ததால் பூத் சிலிப் தருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த அடையாள அட்டையை வைத்து வாக்குசாவடிக்குள் சென்றனர், செல்ல யார் அனுமதி கொடுத்தது என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்றது குறித்து திமுக சார்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கில் அதிமுகவினரை வரவழைத்து வன்முறையை கட்டவிழத்து விட திட்டமிட்டு இருக்கின்றனர்.வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற வேண்டும். சிறு,சிறு சம்பவங்கள் கூட இல்லாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்றுள்ளது என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.