வெனிசுலா நிலநடுக்கம் : உயிரிழப்பு எண்ணிக் கை 2,645 ஆக அதிகரிப்பு!

வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,645 ஆக உயர்ந்துள்ளது.

வெனிசுலாவில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அவை ரிக்டர் அளவில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளது. பேரிடரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசிய அவரசர நிலையை அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பிரகனடப்படுத்தியுள்ளார்.

இதனிடையே வெனிசுலாவில் நிலநடுக்கப் பேரிடரில் சிக்கி 1,430 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,645 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல், நிலநடுக்கத்தால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர் கராகசின் வடக்கே அமைந்துள்ள கடலோர நகரமான லா குவைரா தான் இந்த நிலநடுக்கத்தால் மிகக் கொடூரமான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு இடிந்து விழுந்த நுாற்றுக்கணக்கான கட்டடங்களில் மீட்புக் குழுவினர் சோதனையிட்டு, உயிர் பிழைக்க யாருமில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.