போர்க் கப்பல்களை ஆய்வு செய்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்தியக் கடற்படை கப்பல்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆய்வு செய்தார்.   மூன்று நாள் பயணமாக ஆந்திரா வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, அம்மாநில முதலமைச்சர் ஜெகன்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்தியக் கடற்படை கப்பல்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆய்வு செய்தார்.

 

மூன்று நாள் பயணமாக ஆந்திரா வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் ஹரிசரண் ஆகியோர் வரவேற்றனர். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், இந்த கடற்படை ஆய்வு நடத்தப்படுகிறது.


விசாகப்பட்டினத்தில், 60 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 50 போர் விமானங்களை கடலோர கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ராவில் சென்று ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். போர்க்கப்பல்கள் அணிவகுப்பு மற்றும் போர் விமானங்களின் சாகசங்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்த்து ரசித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.